என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வருமான வரித்துறையினர் சோதனை
நீங்கள் தேடியது "வருமான வரித்துறையினர் சோதனை"
தி.மு.க.வில் இணைய உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:
கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் இருந்து வருகிறார். இவருக்கும், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.சி.சம்பத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. வருகிற 11-ந் தேதி தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வடலூர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அப்போது அய்யப்பன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் தி.மு.க.வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் வீட்டுக்கு இன்று மதியம் 1 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகளும் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் கீதா மற்றும் பறக்கும் படையினரும் ஜீப்பில் வந்தனர். இதனை தொடர்ந்து கடலூர் போலீசார் 10-க்கும் மேற்பட்டோர் முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் வீட்டுக்கு வந்தனர்.
இதையடுத்து வருமானவரி துறை அதிகாரிகள் அதிரடியாக அய்யப்பன் வீட்டுக்குள் சென்றனர். அப்போது வீட்டின் முன்பு திரண்டு இருந்த அய்யப்பன் ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை பார்த்து, என்ன காரணத்திற்காக இங்கே வந்து உள்ளீர்கள்? என கேட்டனர். அதற்கு, நாங்கள் வீட்டை சோதனை செய்ய வந்துள்ளோம் என கூறினார்கள். இதனை பார்த்த முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன், அதிகாரிகளிடம் வீட்டை சோதனை செய்யலாம் என்றார்.
இதன் பின்னர் அதிகாரிகள் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து சோதனை செய்ய தொடங்கினர். அப்போது வீட்டின் முன்புற கதவு மூடப்பட்டது. மேலும் நிர்வாகிகள் யாருக்கும் தெரியாமல் இருக்க வெளிப்புற கதவையும் போலீசார் மூடினார்கள். அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் தி.மு.க.வுக்கு செல்ல உள்ள நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேர்தல் நடக்கும் சமயத்தில் கர்நாடகாவில் ஜே.டி.எஸ். கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்களை மிரட்ட வருமானவரி துறையை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துவதாக குமாரசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். #Kumaraswamy #PMModi #ITRaid
பெங்களூர்:
கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்தல் நடக்கும் சமயத்தில் கர்நாடகாவில் ஜே.டி.எஸ். கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்களை மிரட்ட வருமானவரி துறையை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்துகிறார். அவர்கள் எங்கள் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.
இது அரசியல் பழிவாங்கும் செயல். இதனால் எங்களை அடிபணிய வைக்க முயாது என்று கூறி இருந்தார். குமாரசாமி இந்த தகவலை பதிவிட்ட ஒரு மணி நேரத்துக்கு பிறகு நேற்று இரவு பல்வேறு இடங்களில் வருமானவரி சோதனை நடத்தினார்கள்.
இதில் அரசியலில் தொடர்புடைய தொழில் அதிபர் ஒருவரும் அடங்கும். இதுகுறித்து குமாரசாமி கூறும்போது, பொதுவாக வருமானவரி துறை சோதனை மாநில போலீசார் பாதுகாப்புடன் நடக்கும். ஆனால் வருமானவரி துறையினர் மத்திய ரிசர்வ் போலீசாரை பாதுகாப்புக்கு இன்று அழைத்து சோதனை மேற்கொள்வதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
விமான நிலையத்தில் இருந்து அதிகாரிகளை அழைத்து வர 200-க்கும் மேற்பட்ட கார்கள் தயாராக உள்ளன. ஜே.டி.எஸ். கட்சி, காங்கிரசுடன் தொடர்புடையவர்கள் மீது அரசியல் நோக்கத்துடன் இந்த சோதனைகள் நடக்கிறது. வருமானவரி துறை அதிகாரிகள் ஒரு அரசியல் கட்சியின் ஏஜெண்டாக செயல்பட்டால் அதற்காக வருத்தப்படுவார்கள். வருமானவரிதுறை போன்றவற்றை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக போராட்டம் நடத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #PMModi #ITRaid

×

X